அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்!! இந்தியாவுக்கு வரும் நெருக்கடிகள் என்னென்ன? 

What are the crises facing India?

டெல்லி: பூமியில் பெட்ரோல் அதிகம் கிடைக்கும் இடங்களில் ஈரானும் ஒன்று. ஈரான் மீது தற்போது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு சில நெருக்கடிகள் ஏற்படும் என  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாதிக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஈரானிடமிருந்து தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.

ஈரான் நமக்கு நட்பு நாடாக இருப்பதால் மற்ற அரபு நாடுகளை விட 10 டாலர் குறைவாக இறக்குமதி செய்தது. மேலும், மற்ற நாடுகளுக்கு நாடுகளுக்கு 30 நாட்கள் வரை கடன் கொடுத்தது. ஆனால், இந்தியாவுக்கு 3 மாதங்கள் வரை கடன் கொடுத்தது. ஈரான் அணுசக்தி நோக்கி நகர அமெரிக்கா 2015 ல் JCPOA என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில் ஈரான் மீது இருந்த பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்றும் , ஈரான் தனது அணு சக்தியை கொண்டு ஆயுதங்களை தயாரிக்க முடியாது என்றும் ஒப்பந்தம் போட்டது.

பொருளாதார தடை நீங்கியதால் இந்தியாவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களை வழங்கியது. இந்தியா கச்சா எண்ணெய் வழங்கியது. இவ்வாறிருக்க அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் மீண்டும் பொருளாதார தடை ஏற்பட்டது. இதனால் இந்தியா கச்சா எண்ணெயை  2019 கடைசியாக இறக்குமதி செய்தது. தற்போது ஒரு பேரல் 67  அமெரிக்க டாலருக்கு வாங்கப்படுகிறது. ஈரான் 57 டாலருக்கு விற்பனை செய்திருக்கும். இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இறக்குமதியில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஈரான் நிச்சயமாக இஸ்ரேலுக்கு பதில் தாக்குதல்  நடத்தும்.  அமெரிக்கா தடையை மேலும் உயர்த்தும். இந்தியாவால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வாங்க முடியாது. ஈரானிடமிருந்து வாங்கிருந்தால் 5-10 ரூபாய் வரை விலை குறைந்திருக்கும். தற்போது தாக்குதலினால் இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாது  என்ற நிலை இருக்கிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram