புதுடெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளதால் கட்சி கூட்டணிகள் குறித்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக அரசியல் பணிகளில் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. ஆளும் கட்சி திமுக தலைமை ஆயின கூட்டணி அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி உடன் போட்டி போட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தல் களத்தில் நான்கு முணை போட்டியில் இருக்கிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் குறித்து திமுக சார்பில் “ஓரணியில் தமிழகம்” என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர். தமிழகத்தின் கட்சியின் முன்னிலை அரசியல் பணிகள் மற்றும் கல நிலவரம் போன்றவற்றைப் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான சரத்குமார் மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக சார்பில் சரத்குமாருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததால் இன்னும் இதுபோன்ற எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் ஆதரவாளர்களுடன் சென்று நடிகர் பேசியுள்ளதால் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.