தர்மபுரி: கர்நாடகாவில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உப நீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் அணைகள் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. கேரளா, கர்நாடகாவின் மண்டியா, ராம்நகர், குடகு, மைசூர் உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவு இயற்றியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கன அடி நீர்வரத்து வந்ததன் காரணமாக மீதம் இருக்கும் தண்ணீரை சேர்த்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கபினி அணைக்கு நேற்று இரவு நீர் வரத்தானது 30000 கன அடியிலிருந்து அணையின் பாதுகாப்பு கருதி 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
தமிழக காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 49 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக கர்நாடக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக காவிரி ஆற்றில் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்கிறது. அதன்படி நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு 50,000 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலையில் 65 ஆயிரம் கன அடி நீராக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் மெயின்அருவி, சினிபால்ஸ் போன்ற அறிவுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்து வருவதால் 6 வது நாளாக பரிசல் இயக்க சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.