டெல்லி: இந்திய கடற்படை தலைமையாக தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக போலீசார் அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்திய கடற்படை தலைமையகத்தில் இருந்து பல ஆண்டுகளாக உளவு பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தகவல்களை பரிமாற்றி கொண்டு வந்த பல பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள், பிரபல youtubers, காவலாளி என பல பேரை உளவு பார்த்ததாக இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த வகையில் ஐ எஸ் ஐ காக பல ஆண்டுகளாக இந்திய கடற்படை தலைமையகத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தற்போது தெரியவந்ததால் கைது செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்த விஷால் என்பவர் இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து தகவல்களை கூறியதன் ராஜஸ்தான் போலீசாரின் உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பயங்கரவாத தாக்குதல் நடந்த போதும் இவர உளவு பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தகவல்களை பகிர்ந்து கொண்டது மொபைலில் இருந்த தரவுகள் உழவு பார்ப்பது உறுதி செய்கிறது என கூறுகிறார்கள் அதிகாரிகள்.
பாகிஸ்தானை சேர்ந்த பிரியா சர்மா என்ற பெண் பணத்தை கொடுத்துவிட்டு ரகசிய தகவல்களை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார். விஷால் யாதவ் ஆன்லைனில் விளையாட்டுக்கு அடிமையாகி அதில் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஈடுகட்ட பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க தொடங்கியது விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் அதிகாரி விஷ்ணுகாந்த் குப்தா கூறியதாவது, கிரிப்டோ கரன்சி மூலமாக பணத்தை பெற்றுள்ளது என்றும், சில சமயங்களில் வங்கி கணக்குகளின் மூலமாகவும் பணத்தை பெற்றுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் யாருடன் தொடர்பு உள்ளது என்றும் என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்றும் எவ்வளவு தகவல்களை அனுப்பி உள்ளார் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.