காலி குடோனை தாக்கிய அமெரிக்கா!! யுரேனியத்தை நேக்காக வேறு இடத்திற்கு மாற்றிய ஈரான்!! 

transferred uranium to another place!!
அணு ஆயுத நிலையத்திலிருந்து யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றியதாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் அணு ஆயுத நிலையங்களை முற்றிலுமாக அழித்து விட்டோம் என அமெரிக்க அதிபர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் ஈரான் தனது ஆயுத நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 400 கிலோ யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் மூன்று அணு ஆயுத நிலையங்களை முற்றிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் என செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். ஃபோர்டோ அணு நிலையத்தில் மிகவும் ஆபத்தான யுரேனியத்தை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி அமெரிக்கா முப்பதாயிரம் பவுண்டு பங்கர் பஸ்ட் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தியது.
30000 பங்கர் பஸ்டர்  குண்டுகள் வைத்து தாக்கிய போதிலும் கடுமையான பாதிப்புகள் அடைந்ததே தவிர முழுவதும் அழிந்து விடவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் அணு நிலையத்தில் வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஈரான் 400 கிலோ யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் பாராளுமன்ற சேர்மேனின் ஆலோசகர் மெஹ்தி மொஹம்மதி கூறியதாவது, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் எதிர்பார்த்ததுதான் என்றும், பெரிய அளவிலான சேதாரம் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், மூன்று அணு நிலையங்களில் இருந்து அதிகாரிகள் முன்னரே வெளியேறி விட்டதாகவும், ஜூன் முதல் வாரத்தில் இருந்து அணு நிலையங்களின் நிலையும், தற்போது உள்ள அணு நிலையங்களின் நிலையும் அல்ஜஷீரா செய்தி நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில் கார்கோ வண்டிகள் அணு நிலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்ததாக புகைப்படங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அங்கிருந்த வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram