பூஜையறை வாரம் வாரம் கண்டிப்பான முறையில் சுத்தம் செய்தல் வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களாவது பூஜை அறையில் மங்களகரமாக விளக்கு ஏற்ற வேண்டும். முக்கியமாக பூஜை அறையில் அரிசி மற்றும் உப்பு ஆகியவை இடம் பெற்றிருத்தல் வேண்டும். கல்லு உப்பை பூஜை அறையில் வைத்தால் எதிர்மறை எண்ணங்கள் வீட்டில் குறைந்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
அது போக கட்டாயம் நாவில் சுத்தம் வேண்டும் அதாவது நல்ல வார்த்தைகள், பாசிட்டிவ் வைப்ரேஷனாக நம்மை நாம் வைத்திருத்தல் வேண்டும். ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்கும் நகைகளை திருப்ப முடியாமல் சிரமப்படுபவர்கள் பூஜை அறையில் அல்லது அலமாரியில் கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பு நிறைத்து வைத்திருத்தல் வேண்டும். பிரம்ம ஞான முகூர்த்தத்தில் கல் உப்பிற்கு மேல் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சாமி அறையில் வைத்திருந்த கல் உப்பை மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு அர்ச்சனை செய்து அதனை பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்து வழிபடுதல் அடகு நகைகளை மீட்க பெரிதும் உதவும் என்று நம்புகிறார்கள். கல் உப்பு மிகப்பெரிய கிருமி நாசினியும் கூட. அதனை வீடு கழுவும்போது ஒரு கை அளவு எடுத்து நீரில் கலந்து வீடு துடைத்தால் நன்கு வீடு முன்னேறுவதை காணலாம். நல்ல மன அழுத்தத்தை ஆழமாக போட்டு கல் உப்பு வைத்து வழிபட்டு வந்தால் கண்டிப்பான முறையில் அடகு நகைகளை மீட்க மகாலட்சுமி அருள் புரிவாள்.