CRICKET : அதிக பைகளை கொண்டு சென்று சீனியர் வீரர். அதிரடியாக விதிமுறைகளை கொண்டு வந்த பிசிசிஐ.
பொதுவாக இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கலந்து கொள்ளும் போது தங்களது உடைமைகளை கொண்டு செல்ல அதிகப்படியான பைகளை கொண்டு செல்வது வழக்கமான ஒன்றுதான். அதன்படி பார்க்கும்போது ஒவ்வொரு வீரரும் ஐந்து முதல் பத்து பைகள் வரை கொண்டு செல்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக அந்தப் பைகளில் விளையாட்டு உபகரணங்கள் மட்டுமின்றி உடைகள் அனைத்தும் அடங்கும் ஒவ்வொரு வீரரும் ஏழு அல்லது எட்டு பைகள் கொண்டு செல்வர். அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களது ஷூ க்களுக்கு மட்டும் இரண்டு அல்லது மூன்று பைகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் 27 பைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இவர் செய்த இந்த செயலால் மற்ற சில வீரர்களும் அதிகப்படியான பைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுபோன்று அதிகப்படியான பைகளை கொண்டு செல்வதால் இதனை மைதானத்திற்கு கொண்டு செல்வதற்கே பல லட்சங்கள் செலவு ஆவதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. அதில் 27 பைகள் 250 கிலோ எடை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதனைப் பார்த்து மற்ற வீரர்களும் இதுபோன்று செய்யாமல் இருக்க புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு வீரரும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு விளையாட செல்லும் பொழுது 150 கிலோ வரை பைகளை கொண்டு செல்லவும் உள்நாட்டு போட்டியில் விளையாடும் போது 120 கிலோ எடை வரை பைகள் கொண்டு செல்லவும் புதிய விதிமுறையை கொண்டு வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது பிசிசிஐ.





