நியூயார்க்: அமெரிக்க அரசியலுக்கு உதவும் வகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போர் நடத்தியதற்கான காரணத்தை ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக தாக்குதல் என்று இஸ்ரேல் தரப்பில் கூறியிருந்தது. இரு நாடுகளுக்கு இடையே உலகப் போர் மூலம் பதற்றம் அதிகரித்த நிலையில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா களத்தில் இறங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட அதாவது, பர்தவின் முக்கிய தளங்கள் மீது வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்திய பின் விமானங்கள் அனைத்தும் நாடு திரும்பிவிட்டது. சிறப்பாக செயல்பட்ட போர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகின் வேறு எந்த ராணுவத்தாலும் இது போன்ற தாக்குதலை நடத்த இயலாது என்றும் பதிவிட்டுள்ளார்.
நேற்று காலை ட்ரம் ஈரானில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதை பற்றி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பேசினார். ஈரானில் சில முக்கிய இலக்குகளை மிச்சம் வைத்துள்ளோம். அமைதி அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் அப்படி இல்லை என்றால் மீதமுள்ள இலக்குகளையும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி தகர்ப்போம் என்று பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் தெருக்களின் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பாலஸ்தீன கொடிகளை அசைத்தபடி கோஷம் போட்டுக் கொண்டு ஈரான் மீதான போரை நிறுத்த வேண்டும் என்றும், ஈரானை தொட வேண்டாம் என்றும், டிரம்ப் ஒரு போர் குற்றவாளி என்றும் வாசகங்களை கையில் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரான் மோதலை தொடங்கிய தாக்குதல் மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றை எடுத்துக்காட்டு இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் குவிந்து வருகின்றனர்.