சமீப காலமாகவே சுங்கச்சாவடி பிரச்சனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுங்கச்சாவடி மூலம் தனிநபரின் நேரம் மற்றும் பயண அனுபவம் பாதிக்கப்படாத வகையில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் லாங் டிராவல் செய்பவர்கள் சுங்கச்சாவடி கிராஸ் செய்வதற்காக பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபாஸ்ட்டாக்கு முன்னாடியே ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ரீசார்ஜ் சரியாக இருந்தாலும் வழியே செல்லும் போது அவர்கள் காத்திருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து இடையூறு அளிப்பதாகவும், மேலும் சுங்கச்சாவடி பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், கரெக்டான நேரத்தில் பணம் இருந்தும் சுங்கச்சாவடி சில இடங்களில் வேலை செய்யாது வேற ட்ராக்கில் வானங்களை வர சொல்லும்போது வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை அதிகரித்து வருகின்றது.
அதை பரிசீலனை வைத்து மாற்றி அமைக்கும் நோக்கில் புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தனிநபர் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 3000 விகிதம் முன்கூட்டியே பணம் கட்டிவிட்டு சுங்கச்சாவடியை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வருடத்திற்கு 20 முறை கிராஸ் செய்து கொள்ளலாம். இதனால் தனிநபரின் பயணத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மன நிம்மதியுடனும், பயணத்தின் மகிழ்ச்சி நிறைந்த அனுபவத்துடனும் வாகன ஓட்டுனர்களால் பயணிக்க முடியும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது வியாபார வாகனங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் இது அமலுக்கு வருகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.