ஜம்மு காஷ்மீர்: இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பயங்கரவாத தாக்குதல் நடந்ததை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள ஆர் எஸ் புராவில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயற்சி செய்துள்ளார். அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் ஊடுருவ துரோன்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ அவ்வப்போது முயற்சி செய்வது வழக்கம்.
ஆனால் இந்தியா எல்லை பாதுகாப்பு வீரர்கள் அதனை முறியடித்து வருகிறது. சிலரை விரட்டியும் சிலரை சுட்டு பிடித்தும், சிலரை கைது செய்தும், அவர்களின் முயற்சியை முறியடித்து வருகின்றனர் வீரர்கள். இந்நிலையில் ஜம்மு அருகே உள்ள ஆர் எஸ் புராவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் முயற்சி செய்துள்ளார். உடனடியாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சிராஜ் கான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சர்குதாவை சேர்ந்தவர் சிராஜ் கான் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து பாகிஸ்தான் கரன்சியை பறிமுதல் செய்தனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவியதற்கான காரணம் மற்றும் அதற்கான நோக்கத்தையும் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.