IPL : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனை இந்த வருடம் முறியடிக்கப்படுமா?
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த தொடரில் எந்த அணி கோப்பை வெல்லப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் ஐந்து கோப்புகளை வென்ற நிலையில் தற்போது ஆறாவது கோப்பையை யார் வெல்லப்போவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. முதலாவது போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோத உள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் ஒரு சில முறியடிக்க முடியாத சாதனைகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அதிரடியாக வீரர்கள் விளையாடி முறியடிக்க முடியாத சாதனைகளை முறியடித்துக் காட்டினார் அந்த வகையில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாக 2013இல் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்தது தற்போது அதிக ரன் எடுத்த அணியின் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி முதல் இரண்டு இடங்களிலும் மூன்றாவது இடத்தில் கொல்கத்தா அணி இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனை எதுவென்றால் தனிப்பட்ட நபரின் அதிகபட்ச ரன். அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் டீகாக் 140 ரன்கள் எடுத்துள்ளார். ஒருவேளை இந்த ஆண்டு அதிகபட்ச தனிப்பட்ட வீரரின் ரன் பட்டியலில் இந்த சாதனை முறியடிக்கப்படுமா? அப்படி முறியடிக்கும் வீரர் யார்? உங்கள் கருத்தை பதிவிடுக.