திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பூந்துறையைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதில் நூதனத்திற்கு ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் கடந்த நான்காம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து மூவாற்றுப்புழா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருடப்பட்ட காரானது பதிவு எண்ணை மாற்றம் செய்து திருவனந்தபுரத்தில் ஓடுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் காரை திருவனந்தபுரம் கொல்லம் புறவழிச் சாலையில் பிடித்தனர். அப்போது காரில் இருந்த அல்சாபித் 19 வயது வாலிபர் இறங்கி ஓட முயன்றுள்ளார். தப்பிக்க முயற்சி செய்த வாலிபரை மடக்கி பிடித்தனர் காவல்துறையினர்.
கள்ள காதலியுடன் உல்லாசமாக இருக்க காரை திருடியதாக விசாரணையில் தெரிய வந்தது. திருவனந்தபுரம் பூந்துறையைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் அனுபவிக்க ஆசைப்பட்டுள்ளார் அல்சாபித்.
மேலும், இருவரும் சம்மதித்த நிலையில் விடுதிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் காரை திருடன் முயற்சித்துள்ளனர். காரை அப்படியே ஓட்டினால் மாட்டிக்கொள்வோம் என பதிவு எண்ணை மாற்றியுள்ளனர். பின் இருவரும் ஊர், ஊராக சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலி பற்றி விசாரித்த போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் என தெரியவந்தது. மேலும், கடந்த ஐந்தாம் தேதியிலிருந்து அவரை காணவில்லை என போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது கள்ளக் காதலியையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்