பாட்னா: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மாந்திரீக வேளையில் ஈடுபடுவதாக நம்பி கிராமத்தவர்கள் அவர்களை குடும்பத்துடன் ஏத்தி வைத்து எரித்துள்ளனர். பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டத்தை சேர்ந்த டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு லால், சீதாதேவி, மன்ஜத் ஓரன், டபோ மொஸ்மட், ராணியா தேவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பாபுலால் குடும்பத்தினர் மாந்திரீக வேலையில் ஈடுபடுவதால் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக கிராமத்தார் நம்பினார்கள்.
இதற்கிடையில் நேற்று கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து பாபுலால் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினர் ஐந்து பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக கூறி அனைவரையும் தாக்கியுள்ளனர். அதே வீட்டில் ஐந்து பேரின் உடல்களையும் வைத்து எரித்து கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திலிருந்து ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பி உள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து கொல்லப்பட்டவர்களின் சடலங்களை ஏற்று பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை தீ வைத்து எரித்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.