பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிலமங்களா தாலுகாவில் கே ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெயராம் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் 5 வயதில் ஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்.
ஜெயராம் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார் கணவர் ஜெயராம். ஊர் சுற்றி திரிவது மட்டுமல்லாமல் மதுப்பழக்கமும் இருந்துள்ளது.
இது தொடர்பாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம். எப்போதும் போல் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே ஜெயராம் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனது மகள் ஸ்ரீ இருந்த நிலையில் அவரை கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளார்.
பின் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் கதவை உடைத்து மகாலட்சுமி மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊர் சுற்றி தெரியும் கணவருடன் ஏற்பட்ட தகராறு பச்சிளம் குழந்தையை கொன்று விட்டு தாளம் தற்கொலைக்கு முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜெயராமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.