வாஷிங்டன்: கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தார். மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான வரிகளை அதிகரிக்கச் செய்தார். அதன்படியே எலான் மஸ்க் நிறுவனத்தின் மீதான வரியை அதிகரிக்க செய்தது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வகையில் அமெரிக்கா இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனைத்து நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட போவதில்லை என்றும், சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் அதிபர்.
குறிப்பாக இறக்குமதி விவகாரம் மற்றும் வர்த்தகத்தில் கடுமையான விதிமுறைகள் மற்றும் வரிவிதிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். அமெரிக்காவின் அண்டை நாடாக இருக்கக்கூடிய கனடா நாட்டிற்கு வர்த்தக பேச்சுவார்த்தை மூலம் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார் அதிபர். அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் கனடா என்று கனடாவை சீண்டும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் கனடா நாட்டில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை விதித்தது.
இதில் கடும் கோபத்திற்கு ஆளான அதிபர் கனடாவின் செயலானது விதி மீறல் என்று அவர்களுடன் ஏற்படுத்த இருந்த வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது கூடுதலாக வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியதால் கனடாவுடன் வர்த்தக பேச்சு ஒப்பந்தம் இனி கிடையாது என அமெரிக்க அதிபர் உறுதியாக கூறியுள்ளார்.