கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்!! தாயகம் கொண்டு வர தூதரகம்  முயற்சி!! 

Indian student mysteriously dies

ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவி உயிரிழந்துள்ளார். மேற்கல்வி படித்து வந்த இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது மேலும் சடலத்தை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்திய தூதரகம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது இந்திய தூதரகம். டெல்லியை சேர்ந்த தன்யா தியாகி என்பவர் கனடாவில் படித்து வந்தார். கனடாவில் உள்ள கார்கேரி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்தார்.

கடந்த ஜூன் 17ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. வடகிழக்கு டெல்லியில் உள்ள விஜய் பார்க் பகுதியை சேர்ந்த தனியா தியாகி கனடாவில் படித்து வந்த நிலையில் 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கார்கேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவி தனியா தியாகி மறைவு வருத்தமளிக்கிறது, மேலும், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் விதமாக கனடா அதிகாரிகளுடனும், குடும்பத்தினருடனும் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறி இருந்தது.

இதே போல் கடந்த மார்ச் மாதம் டோமினிக்கன் குடியரசு நாட்டுக்கு சுற்றுலா சென்று இந்திய வம்சாவளியை சேர்ந்த சுதிக்ஷா கோணன்கி என்பவர். இவர் கடலில் குளிக்க சென்ற போது காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram