கள்ளக்குறிச்சி: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் பகுதியில் கேசம்மாள் என்று 98 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டில் மண் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கனமழையின் காரணமாக மன்சபரிடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலின் மீட்டனர். மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.