அன்புமணி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் விதிமீறல்கள் உள்ளது. ஆட்சியாளர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க மாட்டார்களோ அவர்கள் சொல்வதை நிறைவேற்றுவர்களே உயிர் பதவியில் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் சேலம் கமிஷனராக நியமிக்கப்பட்டதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள. நகர்ப்புற ஊராட்சி மேம்படுத்துவதற்கு பதிலாக முறவேடுகளில் கூடாரமாக தமிழகத்தை மாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது.
சேலத்தை போலவே முக்கியமான மாநகராட்சியில் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்கள் ஐஏஎஸ் அல்லாத அதிகாரிகளே சில காலமாக நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வெளியிட்டும் மாநகராட்சியில் ஒன்றான ஓசூர் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த ஸ்ரீகாந்த் ஜனவரி மாதம் ஈரோடு கமிஷனராக மாற்றப்பட்டார். பின்பு அவர் மயிலாடுதுறைக்கு கலெக்டராக பதவி மாற்றப்பட்டார். அதன் பின்பு ஓசூர் ஈரோட்டிற்கு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஐ.ஏ.எஸ் இல்லாத அதிகாரிகள். இதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்று தமிழக அரசுக்கு தான் தெரியும் அவர்களின் நலனுக்கு நன்மை சேர்க்கும் அதிகாரிகளின் நியமிக்கப்படுகின்றன.
மேலும் இளம் வயதில் ஐ.ஏ.எஸ் ஆகும் அதிகாரிகள் விதிமீறல்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக செயல்படுவார்கள் என்பதால் ஐ.ஏ.எஸ் அல்லாத அதிகாரிகளை தமிழக அரசு தேடி தேடி நியமிக்கின்றன என்று நேர்மையான அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் சேலம் கமிஷனராக பதவி ஏற்றுள்ள இளங்கோவன் எடுத்துக்காட்டாக உள்ளார். மேலும் இளங்கோவன் நியமிக்கப்படுவதில் தமிழக அரசு காட்டும் வேகமும் விதிமுறைகள் உறுதி செய்கின்றன.. மேலும் நேர்மையான முறைகேடு செய்கின்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் செல்வாக்கு உள்ள பதவிகள் வழங்கப்படுகின்றன. நேர்மையான உள்ளஅதிகாரிகளுக்கு தண்டனை பதவிகளை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 13 மாநகராட்சியில் மட்டுமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கமிஷனர் ஆக உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இளம் வயது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கமிஷனராக நியமிக்க வேண்டும். உடனடியாக சேலம் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
.