கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Meteorological Center warning

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி அடுத்த ஏழு இனங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் பலத்த தாரை காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

ஜூலை 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பையும் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் இருந்து பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையாக இயல்பு நிலையை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram