சிவகார்த்திகேயனின் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சி குறித்து நடிகர் ஒருவர் பெருமிதம் பேசியுள்ளார். அவர் தான் முன்பே கணித்தது தான் நிறைவேறியுள்ளது என்று வெளிப்படையாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் சிறப்பாக நடிப்பை வெளிக்காட்டி இருக்கும்போது, நடுவராக பணியாற்றிய ஷாம் தான் அவர்.
ஷாம் சமீபத்தில் நடித்து வெளியாகி உள்ள படம் அஸ்திரம். அவர் இதில் திறம்பட செயல்பட்டு உள்ளதாகவும், இது தம் கெரியரை மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நல்ல இயக்குனரோடு நல்ல படம் நடித்திருப்பதாக கூறியுள்ளார். நான் முன்பு வாய்ப்பு தேடி அலையும் போது எனக்கு 12பி படத்தை இயக்குனர் ஜீவா அளித்து இருந்தார். அப்போது எனக்கு முன் அனுபவமும் கிடையாது. அதனைத் தொடர்ந்து மூன்று படங்களில் கையெழுத்திட்டு இருந்தேன். நடிகனாக நடிக்க வேண்டும் என்பது எனக்கு அப்போது குறிக்கோளாக இருந்தது.
அதற்காக நான் கோட்டை விட்டுட்டேன் என்று சொல்ல முடியாது. தொடர்ந்து என் வாழ்வில் நடந்த எதிர்மறை எண்ணங்களை மாற்றி என் கடின உழைப்பை போட்டுக் கொண்டிருந்தேன். சிவகார்த்திகேயன் வளர்ச்சி எனக்கு பெரிதாக தெரியவில்லை. நான் நடுவராக இருந்த போதே நான் அதை கணித்து அவரிடமே கூறியிருந்தேன். அது போல தான் நடந்துள்ளது. நான் அறிமுகமாகி இருக்கும் போது, எனக்கு அப்போது எந்த ஒரு வழிகாட்டியும் கிடையாது. நான் தொடர்ந்து என் வாழ்வில் நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.