கடந்த பத்து நாட்களாகவே தங்கம் விலை சராசரியாக கூடிக் கொண்டே தான் உள்ளது. ஒரே ஒரு முறை தான் இடையில் குறைந்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்றும் சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ₹.8782. இது நேற்றைய தங்க விலையை விட கிராமுக்கு 27 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரனின் (8 கிராம்) விலை ₹.70256. இது நேற்றைய விலையை விட ₹216 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹.8050. இது நேற்றைய விலையை விட ரூபாய் 25 குறைந்து உள்ளது. ஒரு சவரனின் விலை ₹.64,400. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து விற்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளியும் சராசரியாக கிராமிற்கு ரூபாய் இரண்டு குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் ₹.106. அமெரிக்க பிரதமர் ட்ரம்பின் நடுநிலை அற்ற நிலை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். மக்கள் எல்லோரும் முடிந்த அளவு வெள்ளியை சேமிக்க ஆரம்பித்துள்ளார்கள். அடுத்ததாக வெள்ளி விலை எப்பொழுது உச்சம் தொடும் என்பது தெரியாத என்பதால்.