தமிழகத்தில் மழை நிலவரம்!! வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா?

Rainfall situation in Tamil Nadu
சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதன்படி இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. நாளை 1 முதல் 2 தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதல் காரணமாக  ஜூன் 30 தொடங்கி ஜூலை இரண்டாம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை மாற்றம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படுவதால் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூன் 1 மற்றும் 2 ம் தேதிகளில் வங்க கடல் பகுதிகள் வடக்கு வங்கக் கடல் தென்கிழக்கு வங்கக்கடலில் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் சூறாவளி காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 2 முதல் 4 தேதி வரை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் வடக்கு தென்மேற்கு அரபிக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
கொங்கன் கோவா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram