தமிழக அரசுக்கு 30 நாட்கள் கெடு !! எச்சரித்த உயர்நீதிமன்றம்!!

Give 30 days to Tamil Nadu Govt. !!
சென்னை: அரசு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காமல் இருந்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்குவதற்கு முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை வைத்து கோரிக்கை விடுத்தார்.
 அதில் பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அரசுக்கு அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுக்கு அளித்துள்ள விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் முடிவெடுத்து பதில் அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும், அரசாணைப்படி பதிலளிக்காமல் இருந்தால் 25 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் கூறியதாவது, நாளை பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் அரசுக்கு அளிக்கப்பட்ட மனுக்களின் மீது 30 நாட்களில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், மறுபாிசீலிக்க படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்.
அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு மூன்று நாட்கள் ஒப்புகை வழங்க வேண்டும் என்றும், புகார் கிடைத்ததில் இருந்து கால அவகாசமாக ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கால அவகாசம் தேவைப்படும் போது மக்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram