சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக சென்னையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் 2026 மே மாதத்தில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகள் மற்றும் பிரச்சாரம் போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதிமுக, பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் விசிக தன் பக்கம் இழுத்து வலுவான கூட்டணிகளை அமைக்க கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றனர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக மற்றும் தவெக தன் பக்கம் இழுக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் திமுக தேர்தல் பரப்புரைய அதிகாரப்பூர்வமாக இன்று “ஓரணியில் தமிழகம்” என்ற பெயரில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து சாதனைகளை பொதுமக்களிடம் கூறி தொடங்கியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பொறுப்புக் உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளனர். பத்து மாதங்கள் இருக்கும் சூழலில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தேர்தல் பரப்புரையை தொடங்க போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற ஏழாம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பரப்புரையை தொடங்குவதால் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன்படைபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தஞ்சாவூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் என்றும், சுதந்திர தினத்தை முன்னிட்டு விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேச உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணத்தை விவரத்தை அறிவித்த நிலையில் திமுக முதலாவதாக தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளது.