Madhurai: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பற்றி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மார்ச் 25 மத நல்லிணக்க கூட்டமும் மார்ச் 9த் ஊர்வல மாநாடு நடத்தும் அனுமதி கேட்டு இரு அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது ..
இந்தப் பிரச்சனை தொடர்பாக மார்ச் 5ஆம் தேதியே விசாரித்த நீதிபதி கீ.தனபால் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இரண்டு பிரிவினர் கிடையே வழக்குகள் இருகிறது என்று கூறினார். மேலும் பங்குனி உத்திர திருவிழா இந்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்திற்கு அனுமதித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நடக்க கூடும் என்று அனுமதியும் மறுத்தார்.
இந்நிலையில் மார்ச் ஒன்பதில் மதுரை கேகே நகரில் நடந்த அதை நல்லிணக்க மக்கள் கூட்டத்தில் நீதிபதியை தனபால் எம்.பி வெங்கடேசன் கடுமையாக விமர்சித்தார். ஆட்சி அதிகாரம் இருப்பதன் காரணமாக எல்லா துறையிலும் பாஜக மூக்கை நுழைக்கிறது. 1990களில் இந்த பிரச்சனை தொடர்பாக ஓடியவர்கள் இப்பொழுது ஆட்சி அதிகாரம் வந்ததும் மீண்டும் கிளம்பி வந்து விட்டனர் என்றும் அரிட்டாபட்டி மலையை விற்க இந்த பாஜக அரசு தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டியது. ஆனால் திருப்பரங்குன்ற பிரச்சனைதான் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் என்று நீதிபதி கூறுகிறார். மேலும் திருப்பரங்குன்றத்தில் தடை உத்தரவு இருந்தும் பாஜக அமைப்பு நடத்தும் ஊர்வலத்திற்கு மட்டும் நீதிமன்றம் அனுமதி அளிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தீயை பற்றவைப்பனும் தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால் உன்னை போல் முட்டாள் இந்த உலகில் இல்லை என்று எம்.பி கூறினார். உனக்கு சாதகமாக தேவையான தீர்ப்பு எழுதி கொடுத்துவிட்டு நாளை நீ ஓய்வு பெற்ற பின் ஒரு மாநிலத்திற்கு கவர்னர் அதிகாரி ஆகுவதற்கு இந்த மாதிரி அசிங்கமான தீர்ப்பை நாங்கள் ஒருபோதும் தர மாட்டோம். எந்த உயிர் பதவியில் எந்த துறையில் இருந்தாலும் எவ்வித முகமூடி போட்டாலும் அயோக்கியன் அயோக்கியன் தான் என்று நீதிபதியை பேசி உள்ளார்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிஎம்.பி வெங்கடேசன் நீதி வழங்கும் நீதிபதியை ஆதாயத்திற்காக தீர்ப்பு வழங்கினார் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எம்பி வெங்கடேசன் பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதியை அவதூறாக பேசி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய எம் பி வெங்கடேசன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியுள்ளா
ர்.