வாஷிங்டன்: 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக நீரோ மோடி இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். மேலும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு இருந்தது.
சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்ஸ் வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
வங்கி மோசடி தொடர்பாக நேரம் மோடியின் சகோதரர், நேஹல் தீபக் மோடியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேஹல் தீபக் மோடியை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். நேஹல் மோடியை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்காவும் ஏற்று நேஹல் மோடியை கைது செய்துள்ளது. மேலும், நேஹல் மோடி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.