தினமும் காலையில் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர்கள் பத்திரமாக சென்றார்களா? மாலை வேளையில் பத்திரமாக வீடு திரும்புவார்களா என்பது போன்ற கேள்விகளும் பயமும் பெற்றோர்களின் மனதில் நீங்காமல் இருந்து வருகிறது. இதை களைவதற்காக டெல்லியை சேர்ந்த 3 மாணவர்கள் புதிய செயலி ஒன்றை கண்டறிந்திருக்கின்றனர்.
ராகுல் வர்மா, ஹரிஷ் சிங் மற்றும் பிரேம்குமார் என்ற டெல்லியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பத்திரமாக செல்வது மற்றும் திரும்புவது போன்ற செயல்களை பெற்றோர்கள் அறியும் வண்ணம் செயலி ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அந்த செயலிக்கு லிட்டில் மூவ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த செயலி குறித்து மாணவர் பிரேம்குமார் தெரிவித்திருப்பதாவது :-
ஒரு நாள் தன் உறவினரின் உடைய குழந்தையை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்ததாகவும் அந்த ஆட்டோவில் அதிக அளவு குழந்தைகள் இருந்ததால் அது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்த அவர் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் இந்த செயலியை உருவாக்கியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த செயலியானது பெற்றோர் பள்ளிகள் மற்றும் ஓட்டுநர்களை இணைக்கக்கூடிய ஒரு செயலியாக செயல்படும் என்றும், ஆட்டோக்களில் அல்லது வேன்களில் குழந்தைகள் செல்லும் பொழுது ஓட்டுனர்கள் அவர்கள் வண்டியை துவங்கியவுடன் இந்த செயலியானது வேலை பார்க்க துவங்கிவிடும் என்றும் குழந்தைகள் எங்கு பயணிக்கின்றனர் பள்ளிகளை அடைந்துவிட்டனரா என்பது போன்ற தகவல்களை பெற்றோர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே இந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
தற்பொழுது இந்த செயலியானது டெல்லி மற்றும் நொய்டா பகுதிகளில் இருக்கக்கூடிய ஒரு சில பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் இதனை இந்தியா முழுவதும் கொண்டு வருவதே தங்களுடைய கனவு என்றும் அந்த மாணவர்கள் அந்த மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதோடு கூட ஒரு மாணவருக்கு 50 ரூபாய் என வசூல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.