லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள லார் நகரை சேர்ந்த தம்பதிகளின் மகள் பள்ளி மாணவி ஒருவர். சேலம்பூரில் வசிக்கும் ஆசிரியர் தனஞ்சய் வர்மா நடத்தும் டியூஷனுக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 2020 அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், ஆசிரியர் தனஞ்சய் தொடர்ந்து ஐந்து நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கொடுமையை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து தப்பித்து பெற்றோரிடம் நடந்ததை கூறினார் மாணவி.
அதிர்ந்து போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தனஞ்சய் வர்மா-வை கைது செய்தனர். சிறையில் அடைத்த இந்த வழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
பாலியல் வழக்கு விசாரணையின் முடிவு நீதிபதி வீரேந்திர சிங் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதமாக 20000 விதித்து தீர்ப்பளித்தார். அரசு சிறப்பு வழக்கறிஞர் சச்சிதானந்த ராய் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்காக வாதாடினார்.