மதுபானங்களின் விலை அதிகரிப்பு!! வரிகளை உயர்த்திய புதுவை அரசு!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Puduvai government raised taxes!!
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஏராளமான மது வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றது. தரம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதிப்பெரியர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கியமான இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது புதுவை அரசு. அதன்படி மதுபானங்களுக்கு விற்பனை வரிக்கு பதிலாக கூடுதல் கலால் வரி, இறக்குமதி வரி மற்றும் கலால் வரி ஆகியவை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால் வரி போன்ற வரிகளை அதிகரித்துள்ளது. கலால் வரி அதிகரிப்பை தொடர்ந்து புதுவையில் மதுபானங்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதங்களில் பிராண்டி மற்றும் ஒயின்களின் மீது ரூ. 50 முதல் 325 வரை உயர்த்தப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. பீர்களின் மீது விலை ரூ 30 அதிகரித்தது.
அதன் தொடர்ச்சியாக பழைய விலைக்கு விற்க கலால் துறை உத்தரவிட்டிருந்த நிலையில் விலை உயர்வுக்கு பின் பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டது. இன்று முதல் மதுபானங்களில் உயர்த்தப்பட்ட புதிய விலையில் தான் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த விலை கொண்ட ரூ.60 விலையுள்ள குவாட்டரின் விலை ரூ.72 முதல் ரூ. 74 வரை விற்கப்படும் என்று கூறியுள்ளது.
மது பிரியர்கள் மத்தியில் அதிகளவு விற்பனையாகும் பிராண்டட்  குவாட்டர் ரூ.120 லிருந்து உயர்த்தப்பட்டு ரூ.147 க்கு விற்கப்படும் என்று கலால் துறை அறிவித்துள்ளது. புதுவையில் மதுபானங்களின் விலையை கேட்ட மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram