மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு அரசியல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் தூய்மை பணியாளர்கள் மேலும் தீவிர படுத்தினர். அனுமதிக்கப்படாத இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. உயர் மன்றத்தின் உத்தரவால் காவல்துறை போராட்டம் செய்தவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தீபாவளி ஊக்கத்தொகை வளங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஓட்டுனர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துதல், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வாக்குறுதிகளை துணை ஆணையர் எழுத்து பூர்வமாக வழங்கியுள்ளார்.
இந்த கோரிக்கையை குறித்து மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஏற்க போவதில்லை என்றும் கூறி போராட்டத்தில் இறங்கினர். காலை 9 மணியளவில் தொடங்கிய போராட்டம் இரவு 12 மணி வரை நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டம் தொடர்ந்துள்ளது.
தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக மதுரையில் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. விசாரணையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பி எப் தொகை பிடித்தம் உள்ளது என்றும் எந்த திட்டத்தின் மூலமாகவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறினர் தூய்மை பணியாளர்கள்.