கிரிக்கெட்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்(MLC) அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது இதில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் கனி மற்றும் ஆர்காஸ் அணி மோதியது ஹிட் மேயர் கடைசி பந்தில் ஆட்டத்தை வெற்றிக்கு திருப்பினார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்.எல்.சி லீக் தொடரில் எம் மும்பை நியூயார்க் அணி மற்றும் ஆர்காஸ் அணி இரு அணிகளும் மோதின. இதில் ஆர்காஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவர் முடிவில் 237 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
இதில் நிக்கோலஸ் பூரன் 60 பந்துகளை எதிர் கொண்டு 108 ரன்கள் அடித்து சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் அடங்கும். மேலும் தஜிந்தர் தில்லான் 35 பந்துகளுக்கு 95 ரன்கள் விலாசினார் இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகள் அடங்கும்.
தொடர்ந்து களம் இறங்கிய ஆர்காஸ் அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் சிக்கந்தர் ராசா 9 பந்துகளில் 30 ரன்கள் விலாசினார். தொடர்ந்து களமிறங்கிய ஹெட் மேயர் ஆட்டமில்லாமல் கடைசிவரை அதிரடியாக விளையாடினார். கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் பொள்ளாறு வீசிய கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அபார வெற்றியை பதிவு செய்தார். 40 பந்துகளில் 97 ரன்கள் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.