புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் வருட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிம்லாவில் தொடர் மழை காரணத்தால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விளைநிலங்கள் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 1988 க்கு பிறகு இந்த ஆண்டுதான் அதிக மழை பெய்ததாக கூறப்படுகிறது.
சட்லஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஆறுகளில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, “பஞ்சாப் மாநிலம் பெறும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. காஷ்மீர் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இது போன்ற நிலைகளில் பிரதமரின் கவனம் மற்றும் மத்திய அரசின் உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டியது அவசியம். விடீர் கனமழையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து காணப்படுகின்றன.
குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். குடும்பங்களை காப்பாற்ற போராடுவதை பார்த்தால் கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்” என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.