வட்டி விகிதங்களை குறைக்க வலியுறுத்தல்!! இந்திய ரிசர்வ் வங்கி அட்வைஸ்!! 

Urge to reduce interest rates!! RBI
ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5% குறைத்து அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான நாணய கொள்கைக் குழு குறைத்துள்ளது. பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப வட்டி விகிதம் குறைத்து அறிவிக்கப்பட்ட பின் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ளது.
அதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆப் பரோடா போன்ற பல பெரிய வங்கிகள் ஜூன் 6-ம் தேதி அன்று எப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளைக் குறைத்தது. குறைத்து பின் அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதத்தில் இணைக்கப்பட்டு வட்டி விகிதத்தை குறைத்தது. அதோடு ரிசர்வ் வங்கி ஆண்டின் இரண்டாம் பகுதியில் நூறு அடிப்படை புள்ளிகளை முழுமையாக குறைப்பதாக அறிவித்திருந்தது.
நிகர சேவை மற்றும் நேர பொறுப்புகள் 3 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை 2025 ரிசர்வ் வங்கியின் பொருளாதாரத்தின் நிலை என்ற தலைப்பில் வெளியானது. வங்கிகளின் சராசரி கடன் விகிதம் 2025 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் காலகட்டத்தில் 6 புள்ளிகளும் 17 அடிப்படை புள்ளிகளும் என குறைந்தது. டெபாசிட் தொகையை புதிய மற்றும் நிலுவையில் உள்ள டெபாசிட் தொகைகளுக்கு சராசரி வைப்பு தொகை முறையே 27 அடிப்படை புள்ளிகளும்  1 அடிப்படை புள்ளிகள் என குறைந்து காணப்பட்டது.
இத்தகைய சூழலில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வழங்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வரும் நாட்களில் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram