முன்னாள் முதலமைச்சர் மற்றும் தலைசிறந்த நடிகராக இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்க கூடியவர் எம்ஜிஆர். எவ்வளவு உயர்ந்தாலும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததால் இவர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் பெற்றவர். இப்படிப்பட்ட எம்ஜிஆர் நடிகர் ராஜேஷ் அவர்களை அவர் மனைவியுடன் இரவு 11 மணி வரை தன்னுடைய அலுவலகத்தில் காக்க வைத்தது குறித்த தகவல் ஒன்று வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் ராஜேஷ் அவர்கள் சொந்தமாக வீடு கட்டிய பின் அந்த வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு எம்ஜிஆர் அவர்களை அழைப்பதற்காக அவருடைய உதவியாக இருக்க செல்போன் மூலம் அழைப்பு அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு சென்று இருக்கிறார். செல்லும்பொழுது தன்னுடைய மனைவியும் கூட அழைத்துச் சென்ற அவர் எம்ஜிஆரால் 2 மணி நேரம் வெளியில் காக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அதன்பின் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர் அவர்கள் அழைப்பிதழை வாங்கிக் கொண்டுள்ளார்.
ஆனால் யாருடைய கெட்ட நேரமோ விழா நாளும் எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகை எஸ்டி ராஜலட்சுமி அவர்களின் மறைவு நாளும் ஒரே நாளாக அமைந்துவிட்டது. எம்ஜிஆர் தன்னுடைய விழாவிற்கு வருவாரா என மிகவும் குழப்பத்துடனும் வேதனையுடனும் ராஜேஷ் அவர்கள் இருந்திருக்கிறார். எம்ஜிஆர் அவர்களுக்கும் என்ன செய்வதென்று முதலில் புரியவில்லையாம் அதன் பின்பு கெட்ட விஷயத்திற்கு சென்ற பின் நல்ல விஷயத்திற்கு செல்லக்கூடாது என முடிவு எடுத்து விழாவிற்கு முதலில் வந்திருக்கிறார்.
அப்பொழுது நடிகர் ராஜேஷ் அவர்களை பார்த்து நான் வரமாட்டேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாயா? என கேட்டு ஏன் அன்று இரண்டு மணி நேரம் காக்க வைத்தேன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அதாவது நல்ல விஷயத்திற்கு அழைக்க வந்தவர்கள் ராகு காலத்தில் வந்து விட்டதால் இரண்டு மணி நேரம் காக்க வைத்து அதன் பின் இரவு 11 மணிக்கு அழைப்பிதழை பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.