வினோதமாக புழு வாந்தி எடுத்து சிறுமி!! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவ உலகம்!! 

Little girl vomits worms strangely
பெய்ஜிங்: சீனாவில் சிறுமிக்கு வினோத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது கவனத்தை வருகிறது.
கொரோனாவால் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் மோசமான நிலையில் ஏற்படுத்திவிட்டு இருந்தது. இந்நிலையில் சீனாவில் மிக வினோதமான சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் மாகாணத்தை சேர்ந்த யாங்சோ நகரை சேர்ந்த எட்டு வயது சிறுமி. அவர் திடீரென உயிர் உள்ள புழுக்களை வாந்தி எடுத்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து உயிருள்ள புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பாதிப்புக்கான காரணம் அறியப்படவில்லை என்றாலும் தீவிர பரிசோதனையில் உடல்  நலக்குறைவு காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. வீடுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நீர் வடிகால் ஈக்கள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் காணப்படும் ஈக்களை அந்த பூச்சி ஈக்கள் என்று குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள்.
சிறுமி ஒவ்வொரு முறையும் 1 cm  நீளமுள்ள புழுக்களை வாந்தி எடுத்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கும் நிலையில் சிறுமிக்கு மட்டும் தொற்று தீவிரமடைந்தது மூலம் தொற்றானது பரவக்கூடியது அல்ல என கண்டுபிடித்துள்ளனர் உடல் நலத்தில் தீவிரமான பாதிப்பால் ஜியாங்சுவில் உள்ள சூசோவ் பல்கலைக்கழகம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்துப்பூச்சி ஈக்கள் பொதுவாக வடிகால்களின் செலுத்து வளரக்கூடியது. வடிகால் ஈக்களின் லார்வாக்கள் நிலத்தடி நீரில் இருந்து நீரில் கலந்து சிறுமி பல் துலக்கும் போது மற்றும் கழிவறை பயன்படுத்தும் போது உடலில் புகுந்து இருக்கும் என கூறியுள்ளனர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிகாரிகள்.
ஈக்கள் ரத்தம் மூலமாக நோய்களை பரப்பவில்லை எனினும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக குடல் அடைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்றவற்றை ஏற்படுத்தும்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram