விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வழியாக செல்லும் வாகனங்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்களின் பொருட்களான முகக்கவசம், கையுறை, இரும்பு ராடு, போன்றவை அவர்களது வசம் இருந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தது.
விசாரணையின் சிவகங்கை மாவட்டம் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அழகர்சாமி சிவகங்கை மாவட்டம், செல்வகுமார் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் . திண்டிவனம் பிரம்மதேச பகுதியில் இருவரும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சந்தேகத்தின் பெயரில் அழைத்து சென்ற இருவர்களின் குட்டும் வெளியானதை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர் போலீசார்.
மேலும், அவர்களிடமிருந்து வெள்ளி கிருஷ்ணர் சிலை, வெள்ளி கொலுசுகள், இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று ஜோடி கம்மல் போன்றவற்றை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அழகர்சாமி மீது புதுச்சேரி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.