இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தது நான் தான் என்று கூறி வருகிறார் ட்ரம்ப். நேற்று நடந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் தொலைபேசியில் சுமார் 35 நிமிடங்கள் உரையாடினர். அதில் அமெரிக்கா மத்தியஸ்தமும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்
மோடி. இதுவரை எந்த மத்தியஸ்தையும் இந்தியா ஏற்றதில்லை. இனி ஒருபோதும் ஏற்காது என்று தெரிவித்தார். நான் தான் மத்தியஸ்தம் செய்தேன் என்றும், வர்த்தகத்தை கைவிட போவதாக எச்சரித்ததால் தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்றும் பெருமிதம் கூறிக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.
இதன் பின்னணியாக டிரம்புக்கு “நோபல் பரிசு’ ஆசை வந்து விட்டதா? என்று கேள்வி எழுந்துள்ளது. அரசு பயணமாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததால் “அமைதிக்கான நோபல் பரிசு’ தர வேண்டும் என்று உசுப்பேற்றி உள்ளார். அதன்படி நேற்று வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அன்ன கெல்லியே கூறியதாவது, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த அணு ஆயுத தாக்குதலை தடுத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் ட்ரம்புக்கு வழங்கியுள்ளார் முனீர்.
நேற்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இருக்கு விருந்து வைக்கப்பட்ட நிலையில் கூறியது, “போருக்கு செல்லாமலே தாக்குதலை நிறுத்தியதற்கு முனீருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதுதான் நான் அவரை சந்திப்பதற்கான காரணமும் கூட. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருக்கிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ராணுவ தளபதியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று நன்றி கூறியுள்ளார் டிரம்ப்.