ஹைதராபாத்தில் கொடூர சம்பவம்!! மகன் மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை!!

Hyderabad: கடன் தொல்லையால் விபரீத முடிவு எடுத்த குடும்பம். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடன் தொல்லையின் காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவர்களும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள ஹப்சிகுடா என்ற பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசேகர ரெட்டி இவருக்கு வயது 46 இவரது மனைவி கவிதா இவருடைய வயது 36 ஆகும். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் இருவரும் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு இன்னொருவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

சந்திரசேகர் ரெட்டி தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சந்திரசேகர் கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு பல்வேறு இடங்களில் கடன்தொல்லை அதிகமானது. இந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன் பின்பு சந்திரசேகர் ராவை அவர்களுடன் உறவினர்கள் தொலைபேசியில் பலமுறை அழைப்பை எடுக்கவில்லை. மேலும் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீடு உள் பக்கமாக பூட்டுபோட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இரண்டு குழந்தைகளும் படுக்கையறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

பக்கத்து அறையில் சந்திரசேகர் ரெட்டியும் கவிதாவும் தூக்கில் தொங்கி இறந்து கிடந்துள்ளனர். தற்கொலை குறித்து காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பின்பு நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. இதில் மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் அதிக கடன் தொல்லை மற்றும் வேலையின்மை காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சந்திரசேகர் இறந்துள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram