காசா: காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து 139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் ஆயுத குழுவினர் கடத்திச் சென்றனர். ஹமாஸ் ஆயுத குழு மீது போர் அறிவித்தது முதல் காசாமனையில் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கடத்தி சென்ற பனைய கைதிகளில் சிலர் மீட்கப்பட்டாலும் சிலர் அது நிலைமை என்னவென்று தெரியாது உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது. காசாவில் இந்த தாக்குதலினால் உணவு மருத்துவமின்றி தவித்து வரும் நிலையில் உணவு கிடைக்காமலும், ஊட்டச்சத்து குறைபாடினாலும், உயிரிழந்தவர்கள் இனி எண்ணிக்கை ஏராளம்.
மருத்துவமனைகள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் ஏராளமான உயிர்கள் பரிபோனதை தொடர்ந்து ஐ நா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
குறிப்பாக காசா சிட்டி, முவாசி மற்றும் டெய்ர் அல்–பலாஹ் ஆகிய பகுதிகளில் 10 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல். உணவு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வழித்தடங்கள் வழியாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் வழக்கம் போல் தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பானது அமலில் இருக்கும் என கூறியுள்ளது. ஜோர்டான், ஐக்கிய அமீரகம் வான் வழியில் உதவிப் பொருட்களை போடுவதற்காக ஏதுவாக இந்த அறிவிப்பு உள்ளது.