அமலுக்கு வரும் 10 மணி நேர வேலை திட்டம்..   எதிர்க்கும் ஊழியர்கள்!! 

10 hour work schedule in effect

கர்நாடகா: கர்நாடகாவில் இதுவரை 9 மணி நேர வேலை திட்டம் கடைபிடிக்க வந்த நிலையில் தற்போது 10 மணி நேரமாக அதிகரிக்க போவதற்கான  திட்டம் அமலுக்கு வருவதாக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் மாநில தொழிலாளர் நலத்துறை தீர்மானம் ஒன்றை வெளியிட்டதில் தொழிலாளர்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களின் வேலையானது 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி ஆக உயர்த்துகிறது. மேலும், வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்ற கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் கூடுதல் நேர பணியையும் 12 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி தொழில் நிறுவனங்களில் பணி நேரத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்திர பிரதேஷ், உத்ரகாண்ட், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 10 மணி நேர வேலை திட்டம் அமலில் இருப்பதை குறிப்பிட்டுள்ளது. மேலும், 3 வாரங்களுக்கு கூடுதல் நேர பணித்திட்ட காலவரையானது விதிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது 144 மணி நேர ஆக அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. நேர திட்ட காலம் வரையானது தற்போது 50 மணி நேரமாக இருப்பது சுட்டிக்காட்டி உள்ளது. இத்திட்டமானது ஹோட்டல், மதுபானக் கூடங்கள், அலுவலகங்கள், தகவல் நுட்ப நிறுவனங்கள்  மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி 10 பேருக்கு குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் அல்லது கடைகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

10க்கும்  குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இத்திட்டத்திலிருந்து கர்நாடக அரசு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழிலாளர்கள் 9 மணி நேர பணிக்கு தங்களது வீட்டில் இருந்து பல மயில் தூரங்கள் கடந்து அலுவலகத்தில் வந்து பணியாற்றுவது சிரமமாக இருக்கும் நிலை உள்ளது. இதில் 10 மணி நேரமாக அதிகரிக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று தொழிலாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram