10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே 16 ஆம் தேதி காலை 9 மணி அளவில் வெளியானது . இதில் 93.80% மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று காலை முடிவுகள் வெளியாகியுள்ளன .இதில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,40,465 மாணவிகளும் எழுதியுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே சதவீதித்தில் முதலி
பள்ளிகள் வாரியாக 100% தேர்ச்சி விகிதம்,தமிழகத்தில் அரசு பள்ளிகள் (87.34%) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் (93.09%) சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாடம் வாரியாக ,முதலில் அறிவியல்- 10,838 ,அடுத்ததாக சமூக அறிவியல்- 10,256 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சிவகங்கை மாவட்டம் (98.31%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களில் 11,409 (92.83%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று மதியம் 2 மணிக்கு ,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் முழுமையான தகவல்கள் வெளியாக உள்ளன என அறிவிப்பு.