வெளியானது 11-ம் வகுப்பு தேர்வு முடிவு!! முதலில் யார்?? கடைசியில் யார்??

11th class exam result released
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டார்.  10-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வினை  9,13,036 மாணவர்கள்  எழுதினர்.மேலும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 8,23,261 மாணவர்களும் எழுதியுள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.          10 ஆம் வகுப்பு  தேர்வு எழுதிய மாணவ,மாணவியரில் 93.80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களை விட மாணவிகள் 4.14% தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளனர். தேர்வு எழுதியவர்களில்  8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இதில் 4,17,183 (95.88%)  மாணவிகள் மற்றும்  4,00,078 (91.74%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  10 ஆம் வகுப்பு தேர்ச்சியில் சிவகங்கை 98.31% கொண்டு  முதல் இடத்தை பிடித்துள்ளது.இரண்டாம் இடம்  விருதுநகர் (97.45%) மற்றும் மூன்றாம் இடம்  தூத்தக்குடி  (97.45%) பெற்று தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட இடங்கள் திருவள்ளூர்(89.82%), கள்ளக்குறிச்சி (86.91%) மற்றும் வேலூர் (85.44%).
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 4,03,949 (95.13%) மாணவியரும் , 3,39,283 (88.70%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11 ஆம் தேர்வில் அரியலூர்  97.76% கொண்டு முதலிடம்  பெற்றுள்ளது. 2 ஆம் இடம் ஈரோடு (96.97%) மற்றும் 3 ஆம் இடம்  கோவை (96.73%) பெற்றுள்ளது. கடைசி மூன்று மாவட்டங்களாக காரைக்கால் 81.18% ,ராணிபேட்டை 82.58%, மயிலாடுதுறை 83.70% ஆகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram