பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா இமாம் மௌலானா காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹாலி சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்கள் புனிதமான கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்கு 12 முக்கிய அறிவுரைகள் வழங்கியுள்ளார் இமாம்.
அதன்படி, பக்ரீத்தின் போது சுகாதாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மரியாதை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஈத்-உல் அதாவிற்கு 12 அம்ச ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தியாக சடங்கு செய்யும் முஸ்லிம்கள் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
சடங்குகளை செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும். அதை தவிர்த்து தெருக்களில் அல்லது சாலையோரங்களில் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் இமாம்.பலியிடும் விலங்கின் ரத்தத்தை வடிகால்களில் சிந்தக்கூடாது
மேலும், அது மண்ணில் புதைக்கப்பட்டால் தாவரங்களுக்கு உரமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளார். முக்கியமாக, பலி சடங்குகள் நடக்கும் பொழுது எக்காரணம் கொண்டும் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கவும் கூடாது. மேலும், அதையும் மீறி எடுத்தால் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பலியிட்ட விலங்கின் ஒரு பகுதியை ஏழை எளியோருக்கு விநியோகிக்கவும், குடும்பத்தின் சார்பில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் பாதுகாப்பிற்கு பிரார்த்தனை செய்யவும் வலியுறுத்தியுள்ளார் இமாம். பக்ரீதின் போது பலியிடப்பட்ட விலங்கானது மூன்று பகுதிகளாக பிரித்து குடும்பம், தேவைப்படுபவர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.
புதிய ஆடைகளை அணிந்து அனைத்து முஸ்லிம்களும் இறைச்சி சார்ந்த உணவுகளை அனுபவிப்பது அவர்களது கடமை என்று கருதுகிறார்கள். நாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.