தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுமி!! பின்னணி என்ன??

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி, பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, சிறுமியிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து தாக்கினர்.

இந்த சம்பவம் கிராமமெங்கும் பரவியதால், அவமானம் என்ற தவறான எண்ணத்தில் மனஅழுத்தத்துக்குள்ளான சிறுமி தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சதீஷ் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு உண்மை வெளிவரும் என கூறப்படுகிறது.

POCSO சட்டம் குழந்தைகளுக்கான வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடக் கூடாது

விசாரணை குழந்தைக்கு ஏற்ற சூழலில் நடைபெறும்,

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். இத்தகைய சூழலில் குழந்தைகள் தற்கொலை முடிவை எடுப்பதற்குக் காரணம் பயமும் சமூக அழுத்தமும் தான்.

என்ன நடந்தாலும் நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்ற பெற்றோரின் ஆதரவு ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.

உதவி எண்கள்

பாதிப்பு அல்லது மனஅழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்:

1098 – குழந்தைகள் உதவி எண்

14417 – கல்வி & மனநல ஆலோசனை

112 / 100 – அவசர போலீஸ் உதவி

14416 (Tele MANAS) – தேசிய மனநல உதவி

104 – தமிழக சுகாதார உதவி

Sneha: 044-24640050

AASRA: +91-22-27546669

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram