Cricket: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இந்தியாவில் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி நாளை இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டியில் மோத உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இதனால் இந்த மூன்றாவது போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது அதனால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது பந்துவீச்சாளர்கள் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. மேலும் இந்த காரணங்களால் நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் மைதானம் ஆனது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இதனால் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு பேட்டிங்கிற்கு பலமாக சாய் சுதர்சன் மீண்டும் அணிக்குள் வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாடாத நிலையில் அவர் மூன்றாவது போட்டியில் பரிசு கிருஷ்ணா இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த இரு முக்கிய மாற்றங்கள் அணிக்கு வெற்றியை தருமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.