Cricket: ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் அவர்கள் நடைபெற்ற ஒரு போட்டி 2020 இல் நடைபெற்றுள்ளது.
நாளை மறுநாள் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டி தொடர் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் பரவி வரும் நிலையில் ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் நிகழ்ந்த சம்பவம் குறித்து இச்செய்தியில் பார்ப்போம். ஒரு போட்டியில் ஒரு அணி எடுத்த எண்ணிக்கையை சமன் செய்தால் சூப்பர் ஓவர் அடிப்படையில் ஒரு ஓவர் மட்டும் வைத்து போட்டி நடத்தி முடிக்கப்படும்.
ஆனால் அந்த சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் என்ன நடக்கும் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும். அது போன்ற ஒரு போட்டி 2020ல் மும்பை மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 176 ரன்கள் எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 முடிவில் 176 ரன்கள் எடுத்து சமன் செய்தது.
இதனால் போட்டி சூப்பர் ஓவர் முறையில் நடைபெற்றது சூப்பர் ஓவரில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது களமிறங்கிய மும்பை அணி ஐந்து ரன்கள் எடுத்து சமன் செய்தது. இதனால் போட்டி மிகவும் சுவாரசியமாக இரண்டாவது சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரண்டாவது சூப்பர் ஓவரின் மும்பை அணி 11 ரன்கள் அடித்து 12 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப் அணி 15 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. இதுவே வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இரண்டு சூப்பர் ஓவர் முறையில் நடைபெற்ற போட்டியாகும்.