இந்த வருடத்தில் 97வது ஆஸ்கர் விருதுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை லைவாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் பார்க்கலாம். இதுவரை வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தி ப்ரூட்டிலிஸ்ட் படத்தில் நடித்திருந்த நடிகர் ஆட்ரியன் பாட்ரி இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்காருக்கான சிறந்த நடிகர் விருதை ஏற்கனவே பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் சிறந்த ஒளிப்பதிப்பிற்கான விருதை இதன் ஒளிப்பதிவாளர் லால் கிராவ்லி பெற்றுள்ளார். ஆக மொத்தம் தி புருட்டாலிஸ்ட் படமானது இரு ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த கலை, இயக்கம் ஆகியவற்றுக்கான விருதுகளை விக்கிடு படத்திற்கான நாதன் குரோலே மற்றும் லீ ஷேன்ட்லெஸ் ஆகியோர் பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை ஆனாரா படத்திற்காக சீன் பேக்கர் வென்றுள்ளார்.
இவர் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளார். சிறந்த அனிமேஷனுக்கான விருதை ஃப்லோ என்கிற திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருதை எமீலியா பாரிஸ் படத்துக்காக ஸோ ஷல்தனா பெற்றுள்ளார். மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை ய ரியல் பெயின் படத்திற்காக கெய்ரான் கல்கின் வென்றுள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த விருதுகள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது கிடைத்து வருகிறது. திரையுலகில் உள்ளவர்கள் இந்த ஆஸ்கார் விருது பெற்றவர்களை வாழ்த்தி வருகின்றனர். திரையுலகில் உள்ளவர்களுக்கு இவ்விருது பெரும் மகுடமாக கருதப்படுகிறது.