மதுரை: மதுரைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தீபத்திருவிழாவின் போது மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதன் விசாரணை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.1003 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்ணாடி தயாரிப்பு ஆலையை தமிழக முதலமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.