டெல் அவிவ்: ஹமாஸை முழுமையாக அளிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி இருந்தது. இந்நிலையில் காசா பகுதியில் உள்ள உதவி மையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடந்தது நடத்தியதில் 30 பேர் உயிரிழந்தனர் 100 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையான மோதல் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் நிறுத்த போவதில்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிகின்றன. காசா மனிதாபிமான அறக்கட்டளை (ரஃபா நகர்) மையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடந்ததாகவும் அதில் 30 இருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இந்த மையம் அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன செய்தி நிறுவனங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனர்கள் அதிகாலையில் உதவி பொருட்களை பெறுவதற்காக கூடிய போது தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. காசாவில் நடந்த இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 30 அப்பாவி மக்களை கொல்லப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், இஸ்ரேலிய டாங்கிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது என்று கூறினார். இந்த தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை இஸ்ரேல். இந்த தாக்குதல் ஆனது மேலும் தொடருமா என்ற கேள்வி அனைவரிடையேயும் நிலவியுள்ளது.