பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்!! போக்சோவில் 3 பேர் கைது! 

3 people arrested in POCSO!
தர்மபுரி: பள்ளி சிறுமிகளிடம் instagram செயலி மூலம் பல திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த மூன்று பேர் கைது செய்துள்ளனர் போலீசார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சுங்கரஹள்ளியை சேர்ந்த சரவணன் ( டிரைவர்), கெட்டூர் பகுதியை சேர்ந்த செந்தமிழ்(19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இருவரும் சேர்ந்து 17 வயதுடைய பிளஸ் 2 படிக்கும் சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை நேரில் அழைத்து அரைகுறை ஆடைகளுடன் ஆபாச படம் எடுத்துள்ளனர். ஆபாச படத்தைக் காட்டி சிறுமிகளை உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துள்ளனர்.
சிறுமிகள் மறுப்பு தெரிவிக்க அதில் ஆத்திரமடைந்த இருவரும் ஆபாச படத்தை பொத்தானூர் சேர்ந்த அவர்களது நண்பரான டிரைவர் வெங்கடேஷ் (24) என்பவருக்கு செல்போனில் அனுப்பி உள்ளனர். மூவரும் சேர்ந்து இரண்டு சிறுமிகளையும் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு மிரட்டி உள்ளனர். மேலும், வர மறுத்தால் whatsapp மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
செய்வதறியாது இருந்த சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்ததின் கீழ் செந்தமிழ், வெங்கடேஷ்,சரவணன் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கீழ் நேற்று கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram